தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

முயற்சி வேண்டும்


நிறைய முயற்சி வேண்டும்
நில்லாமல் உழைக்க வேண்டும்

நித்தமும் சிந்திக்க வேண்டும்
திறமையை வளர்க்க வேண்டும்

உண்மையாய் பேச வேண்டும்
உறுதியாய் இருக்க வேண்டும்

கருத்தோடு படிக்க வேண்டும்
கல்லாமை விலக வேண்டும்

மெலிந்த உடல் வேண்டும்
மென்மையான மனம் வேண்டும்

அவையில் அடக்கம் வேண்டும்
அதிகம் பேசாதிருக்க வேண்டும்

ஆணவம் அழிய வேண்டும்
அன்பு செலுத்த வேண்டும்

பெற்றோரை வணங்க வேண்டும்
பெரியோரை மதிக்க வேண்டும்

நல்ல நடத்தை வேண்டும்
நாலு பேர் பாராட்ட வேண்டும்

மூடநம்பிக்கை மறைய வேண்டும்
முயற்சி ஒன்றே போதும்

- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்


60/77