கோடைக்காலம் வந்ததாம்
கோடி எறும்பு போகுதாம்
தலையில் உணவைத் தூக்கியே
தரையில் நடந்து போகுதாம்
பாதி உணவைத் தின்றதாம்ம்
மீதி பாதி சேர்த்ததாம்
மழைக்காலம் வந்ததாம்
மாரி அதிகம் பெய்ததாம்
வெளியில் செல்ல முடியாமல்
சேர்த்த உணவைத் தின்றதாம்
எறும்புக் கூட்டம் போலவே
எதிர்காலத்திற்கு சேர்ப்போமே