தமிழ் பாடல்கள்

MutualFunds MutualFunds
  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

குட்டி எலி


குட்டி எலி அன்றொரு நாள்
குதிச்சு குதிச்சு ஓடுச்சாம்!
 
யாணை, புலி, சிங்கம் காண
ஆசை கொண்டு ஓடுச்சாம்!
 
உயரமான மரத்தில் ஏறி
உலகமெல்லாம் பார்ர்ததாம்!
 
தூரத்திலே சிங்கம் ஒன்று
தூங்குவதைப் பார்த்ததாம்!
 
மலமல என்று இரங்கி
அது மகிழ்ச்சியுடன் ஓடுச்சாம்!
 
மேலும் கீலும் பார்த்து
சிங்கத்தின் மீசயை பிடித்து இழுத்ததாம்!
 
வலய வலய வந்து
அதன் வாலைப் பிடித்து இழுத்ததாம்!
 
கோபம் கொண்டு எழுந்த
சிங்கக் குட்டி எலியப் பிடித்ததாம்!
 
கையில் பிடித்த எலிய அது
கடித்துதின்ன பார்த்ததாம்!
 
கை கூப்பி குட்டி எலியும்
கருனை கருனை என்றதாம்!
 
மன்டியிட்டு குட்டி எலியும்
மன்ணிப்பு என்றதாம்!
 
பெரிய மணசு பன்னி
சிங்கம் பிழைத்துப்போ என்றதாம்!
 
விடுவிடு என்று நடந்த
சிங்கம் வேடன் வலையில் விழுந்ததாம்!
 
கர்ஜித்து அழுத ஓசை
காடு முழுதும் கேட்டதாம்!
 
எங்கோ கேட்ட குரல் என்று
குட்டி எலியும் வந்ததாம்!
 
சிங்கம் சிக்கியிருந்த வலயை அது
சின்னா பின்னமாய் கடித்ததாம்!
 
வெளியில் வந்த சிங்கம் எலியிடம்
வெல்டன் என்று சொன்னதாம்!
 
செய்த நன்றி மறவேன் என்று
சின்ன எலியும் சொன்னதாம்!

- ஆசிரியர் :*


74/77