தமிழ் பாடல்கள்

MutualFunds MutualFunds
  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

கிழமை குழந்தைக்


ஞாயிற்றுக் கிழமை
நகையைக் காணோம்

திங்கக் கிழமை
திருடன் கிடைத்தான்

செவ்வாக் கிழமை
ஜெயிலுக்குப் போனான்

புதன் கிழமை
புத்தி வந்தது

வியாழக் கிழமை
விடுதலை அடைந்தான்

வெள்ளிக் கிழமை
நல்லவன் ஆனான்

சனிக் கிழமை
சாப்பிட்டுப் படுத்தான்

அப்புறம் அவன் கதை
யாருக்குத் தெரியும்

- ஆசிரியர் :கவிஞர் அழ வள்ளியப்பா


52/77