தமிழ் பாடல்கள்

MutualFunds MutualFunds
  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

கப்பல்


கப்பல் பாரு கப்பல் பாரு கப்பல் பாரு 
கடல் கடந்து செல்லும் இந்த கப்பல் பாரு 

தண்ணீரிலே மிதக்கும் இந்த கப்பல் பாரு 
தக்க வசதி உள்ள கப்பல் பாரு 

கரையிலே நிக்கும் இந்த கப்பல் பாரு 
கலங்கரை விளக்கம் போய் பாரு 

போட்டி போட்டு போரில் வெல்லும் கப்பல் பாரு 
நீருக்குள்ளும் நீந்திச் செல்லும் கப்பல் பாரு 

மாடி மேலே மாடி உள்ள கப்பல் பாரு 
மாலுமிதான் கப்பலை ஒட்டுவாரு

- ஆசிரியர் :வெ. பிரசன்னக் குமார்


72/77