கதைகள் பாடல்களாக

சிங்கமும் முயலும்


சிங்கமும் முயலும்

காட்டில் ஒரு சிங்கம்
சுத்தி சுத்தி வந்ததாம்

கண்ணில் பட்ட முயலையெல்லாம்
கடிச்சு கடிச்சு தின்னுச்சாம்

கும்பல் கும்பலாய் சாவதாலே
முயலும் கூட்டம் போட்டுச்சாம்

கூட்டம் போட்ட முயலும்
கூடி கூடி பேசிச்சாம்

கூடிப் பேசிய முயல்களும்
சிங்கத்திடம் போனதாம்

சிங்க ராஜா சிங்க ராஜா
சிந்திச்சுப் பாருங்க

சீக்கிரமே காலியாகிடுவோம்
இப்படி தின்னாக்க

தினம் ஒருவரா நாங்க
வரோம் சாப்பிட்டுக்கோங்க

நீன்ட நாள் சாப்பிடலாம்
சொன்னா கேளுங்க

முயலு சொன்ன ஐடியா
நல்லா இருந்ததாம்

தினம் ஒருவரா முயலை
வரச் சொன்னதாம்

முதல வந்த முயலதுவும்
நல்லா பேசிச்சாம்

சிங்கத்திடம்
தின்ன சொன்னதாம்

என்ன அவசரம் என்று
சிங்கம் கேட்டதாம்

உன்னை விட பெரிய
சிங்கம் இருக்கு என்றதாம்

எங்கே இருக்கு காட்டு
சிங்கம் சொன்னதாம்

கிட்ட உள்ள கிணத்துகிட்ட
அழைத்துச் சென்றதாம்

எட்டிப்பாரு பெரிய சிங்கம்
இருக்கு என்றதாம்

எட்டிப் பார்த்த சிங்கம்
பிம்பம் கண்டதாம்

தன்னைத் தானே பார்த்து
கோபம் கொண்டதாம்

கோபம் கொண்ட சிங்கம்
கிணற்றில் பாய்ந்ததாம்

சிங்கம் தொல்லை ஒழிந்ததாலே
முயலும் சிரிச்சிச்சாம்

- ஆசிரியர் :*


2/2