என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் உத்திர பாகத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் அர்த்தம்:- எவர் ஒருவர் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை பக்தியோடு ஒரு தடவை படிக்கிறாரோ அவருக்கு யார் சத்ருக்களோ அவர்களை சரப மூர்த்தி நாசம் செய்கிறார்.
ஸ்ரீ சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சமே. ஆகவே கால பைரவாஷ்டகத்தையும் அச்சமயம் கூறிவழிபடலாம்.