கடன் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? கடன்கள் நீண்ட காலமாக தீர்க்கப்பட முடியாமல் உள்ளதா? கடன் கஷ்டங்களை நீக்கும் கீழ்க்கண்ட நரசிம்ம ஸ்தோத்திர பொருளை தினமும் சொல்லி வாருங்கள். நிச்சயமாக கடன் தொல்லை தீரும்.
தேவகாரியங்கள் பூரணத்துவம் பெற சபா மண்டபத்தில் அவதரித்தவரே! மகாவீரரே! என் கடன்களிலிருந்து என்னை விடுவிக்கும்படி வேண்டிக்கொண்டு நமஸ்கரிக்கின்றேன். மகாலட்சுமியால் தழுவப் பெற்ற இடது பாகத்தை உடையவரே! பக்தர்கள் கேட்கும் வரத்தைத் தருபவரே!
மகாவீரரே! என் கடன்களிலிருந்து என்னை விடுவிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டு நமஸ்கரிக்கின்றேன். நரம்புகளை மாலையாக அணிந்து கொண்டவரே! சங்கு, சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளைத் தரித்துக் கொண்டவரே! மகாவீரரே! என்னைக் கடன் உபாதையிலிருந்து காத்தருள நமஸ்கரிக்கின்றேன்.
நினைத்த மாத்திரத்திலேயே பாபங்களை நீக்குபவரே! கத்ரூபுத்திரர்களான நாக விஷங்களால் ஆபத்து ஏற்படாமல் காப்பவரே! மகாவீரரே! கடன் தொல்லையிலிருந்து விடுபட உம்மை நமஸ்கரிக்கின்றேன்.
சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டால் யானைகள் அஞ்சி ஓடும். அப்பேர்ப்பட்ட பெரிய பயங்களையே போக்கும் மகாவீரரே! என் கடன் தொல்லைகளிலிருந்து நான் விடுதலை பெற உம்மை நமஸ்கரிக்கின்றேன்.
பிரகலாதனுக்கு வரம் அளித்தவரே! லட்சுமிபதியே அசுர வேந்தனான இரண்யகசிபுவின் நெஞ்சைக் கிழித்தவரே! மகாவீரரான நரசிம்மரே! என் கடன்களிலிருந்து விடுபட உம்மை நமஸ்கரிக்கின்றேன்.
குரூரமான கிரக பார்வையால் கஷ்டத்திலிருக்கும் பக்தர்களுக்கு உபயம் தருபவரே! மகாவீரரான நரசிம்மரே! கடன் உபாதையிலிருந்து நிவாரணம் பெற உம்மை நமஸ்கரிக்கின்றேன்.
வேதம், உபநிஷத் யக்ஞம் இவைகளின் ஈஸ்வரனே பிரம்மா, ருத்ரன் இவர்களால் நமஸ்கரிக்கப்பட்டவரே! மகாவீரரான நரசிம்மரே! கடன் தொல்லைகளிலிருந்து விடுபட உம்மை நமஸ்கரிக்கின்றேன்.
ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் மனமுருகிப் படிப்பவருக்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும். அதோடு மட்டுமல்லாமல் நியாயமான முறையில் சம்பத்தும் சேரும்.
ஸ்ரீமத் வாதிராஜ சுவாமிகளால் நரசிம்ம புராணத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த ஸ்லோகம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் பூரண அனுக்கிரகத்தையும் தரக் கூடியது. ஒவ்வொரு சுவாமிக்கும் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும்.
- ஆசிரியர் :*