தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

பட்டம்


பாப்பா பாராய் என்பட்டம்
பறக்குது வானில் என்பட்டம்

விமானம் போலே வானத்திலே
விரைந்தே போகுது என்பட்டம்

அதிக அதிக உயரத்திலே
அழகாய் போகுது என்பட்டம்

எந்தன் பட்டம் பறப்பதையே
எல்லோரும் வந்து பாருங்களேன்

- ஆசிரியர் :வல்லநாடு ராமலிங்கம்


24/77