தமிழ் பாடல்கள்

  1. தோசை அம்மா தோசை
  2. தோ தோ நாய்குட்டி
  3. வணக்கம்
  4. மாம்பழம்
  5. நிலா
  6. அணிலே அணிலே ஓடி வா
  7. தவளையார்

பட்டணம்


பட்டணமும் போகலாம்
பட்டுச் சொக்காய் வாங்கலாம்

பஸ்ஸில் ஏறி சுற்றலாம்
பண்டம் வாங்கித் தின்னலாம்

பூங்கா போயி ஆடலாம்
புதிய நட்பைத் தேடலாம்

அழகுப் பேனா வாங்கலாம்
ஆசை தீர எழுதலாம்

பட்டம் ஓன்று கட்டலாம்
பறக்க விட்டு மகிழலாம்

- ஆசிரியர் :வல்லநாடு ராமலிங்கம்


26/77